துணிகளை துவைப்பது மட்டுமல்லாமல், துணிகளை பராமரிக்க என்ன தேவை என்பதையும் உங்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு இயந்திரம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படியான ஒரு சிறப்பம்சம் உள்ள படைப்பை தான் Samsung உங்களுக்கு அறிமுகம் செய்கிறது.
Samsung 12 Kg Bespoke AI வாஷிங் மெஷின், அதன் ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் பெரிய திறனுக்காக பாராட்டப்பட்டது, AI-இயக்கப்படும் வாஷ் சுழற்சிகள், ஆற்றல் திறன் மற்றும் துணி பராமரிப்பு ஆகியவற்றை வழங்குகிறது, இதனால் சலவை எளிதாகவும் திறமையாகவும் செய்கிறது. இந்த சலவை இயந்திரத்தின் AI உதவியுடன் துணிகளை துவைப்பதின் மூலம் சிரமங்களை குறைத்து நேரத்தை மிச்சப்படுதுகிறது.
Samsung 12 kg AI வாஷிங் மெஷினின் சில சிறப்பம்சங்களை பற்றி இங்கே பார்போம். முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
AI Powered ஸ்மார்ட் சலவை :
இந்த இயந்திரம் உங்கள் வழக்கமான சலவை பழக்கங்களைக் மேம்படுத்த, துவைக்கப்படும் சுமை மற்றும் துணி வகையைப் பொறுத்து ஆடைகளில் உள்ள அழுக்கை பகுப்பாய்வு செய்து நீர் வெப்பநிலை, சுழற்சி மற்றும் டிடர்ஜென்டை பயன்பாட்டை தானாகவே சரிசெய்யவும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. துணிகளை ஊற வைக்கும் நேரம் மற்றும் துவைக்கும் நேரத்தைத்யும் AI அம்சத்துடன் கணக்கிட்டு, வழக்கமான சலவை முறையில் இருந்து சுமார் 15% வரை நேரத்தை சேமிக்கிறது.
பெரிய கொள்ளளவு:
12 Kg கொள்ளளவு கொண்ட இது, அதிக அளவு சலவைத் துணிகளைக் கையாளக்கூடியது, இதனால் பெரிய குடும்பங்கள் அல்லது அதிக ஆடைகளைக் கொண்ட தனிநபர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அதிக நேரத்தை சலவை செயல்முறையில் செலவிட விரும்பாத நபர்களுக்கு ஏற்ற ஒரு சரியான தேர்வு ஆகும்.அளவுக்கு மிகுதியான அழுக்கு துணிகளை துவைக்கும் போது நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இனி இடம் இருக்காது. அதாவது, இந்த சலவை இயந்திரத்தின் பெரிய டிரம், சலவை இயந்திரத்தின் அருகே பல மணி நேரம் காத்திருந்து, துணிகளை சிறுக சிறுக துவைக்க வேண்டிய கட்டாயத்தை போக்கி, சுதந்திரமான சலவை அனுபவத்தை அளிக்கிறது.
ஆற்றல் திறன்:
துணிகளை மென்மையாக துவைக்கும் வகையில், துணிகளின் ஆயுளைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Samsung-ன் இந்த புதிய படைப்பு AI Eco Bubble என்ற அம்சம் குமிழ்களை உருவாக்கி, 24% வரை கறைகளை அதிகம் நீக்குகிறது மற்றும் 45.5% வரை சிறந்த துணி பராமரிப்பை உறுதி செய்கிறது. மேலும் இது ஐ உதவியுடன் துணி வகையைக் கண்டறிந்து குமிழ்கள், துணி துவைக்கும் நேரம், வெப்பநிலை மற்றும் சுழற்சி வேகத்தை சரிசெய்கிறது. எனவே, உங்களுக்குப் பிடித்த துணியின் பளபளப்பு இழந்துவிடுமோ என்ற கவலை இனி உங்களுக்கு தேவையில்லை என்றே சொல்லாம்!
குறைந்தளவு மின்சாரத்தில் அதிகளவு சலவை செய்யலாம் User Friendly:
Samsung-ன் இந்த புதிய சலவை இயந்திரத்தில் காணப்படும் AI Energy பயன்முறை உங்கள் மின்சார பயன்பாட்டை கண்காணிக்க உதவுகிறது. மின்சார நுகர்வை சரிபார்த்து, மின் கட்டணம் எவ்வளவு வரும் என்பதை அறிந்துக்கொள்ளவும் உதவி செய்கிறது. அந்த வகையில் இந்த இயந்திரம் சுமார் 70% மின்சாரத்தை சேமித்து, குறைந்த செலவில் அதிக பலன் காண உதவி செய்கிறது.
AI-இயக்கப்படும் Control Panel உள்ளுணர்வு கொண்டது மற்றும் பயன்படுத்த எளிதானது, இயந்திரம் உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் உகந்த சலவை சுழற்சிகளை பரிந்துரைக்கிறது.
அதிவேகம் மற்றும் கறை நீக்குதல்:
ஒரு சலவை இயந்திரம் 39 நிமிடங்களில் தனது சலவை செயல்பாட்டை சரியாக முடித்துவிடும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா? அதிவேகத்தின் மறு பெயராக இருக்கும் இந்த சலவை இயந்திரம் அதனை சாத்தியமாக்குகிறது. இயந்திரத்தில் சுழல் வேகத்தை அதிகரித்து, துவைக்கும் நேரத்தை குறைத்து, மிகவும் குறைந்த நேரத்தில் அழுக்கான உங்கள் ஆடைகளை பளபளப்பாக மாற்றுகிறது.இந்த இயந்திரம் கறைகளை திறம்பட அகற்றி,முழுமையான சுத்தம் செய்வதை
உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேர்த்தியான வடிவமைப்பு:
Bespoke சலவை இயந்திரம் ஒரு நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பைக்
கொண்டுள்ளது,இது எந்த சலவை அறையையும் பூர்த்தி செய்ய முடியும்.
துணிகளை சிறுக சிறுக துவைக்க வேண்டிய கட்டாயத்தை போக்கி, சுதந்திரமான
சலவை அனுபவத்தை அளிக்கிறது.
பணத்தை மிச்சப்படுத்துங்கள்:
Auto Dispense அம்சம் கொண்ட இந்த சலவை இயந்திரம், துணிகளை துவைக்க தேவையான அளவு டிடர்ஜென்ட் மற்றும் பேப்ரிக் சாப்ட்னரை தேர்வு செய்கிறது. டிடர்ஜென்ட் மற்றும் பேப்ரிக் சாப்ட்னருக்கு என தனித்தனி பெட்டிகள் கொண்டு செயல்படும் இந்த சலவை இயந்திரத்தில், ஒவ்வொரு சலவைக்கு பின்னரும் நீங்கள் மீண்டும் நிரப்ப வேண்டிய தேவை இல்லை.
மின் நுகர்வு :
AI ஆற்றல் பயன்முறை இல்லாமல் மின் நுகர்வு = 0.539 KWh.
AI ஆற்றல் பயன்முறையில் மின் நுகர்வு = 0.145 KWh.
SuperSpeed Wash :
சில மாடல்கள் விரைவான மற்றும் திறமையான சுத்தம் செய்வதற்கு சூப்பர்ஸ்பீடு வாஷ் அம்சத்தை வழங்குகின்றன.
உங்கள் தேவைகளை நன்கு அறிந்த ஒரு உதவியாளர் போன்றது. AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் விருப்பங்களை புரிந்துக்கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட சலவை அனுபவத்தை உங்களுக்கு அளிக்கிறது. மேலும், உங்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் பொருத்தமான சலவை சுழற்சிக்கான பரிந்துரைகளையும் இது வழங்குகிறது.
தானியங்கி சலவை பராமரிப்பு மூலம் இந்த சலவை இயந்திரம் உங்கள் சலவையை எளிதாக்கட்டும், அதே நேரம் முக்கியமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கட்டும்.