புதிய Moto Book 60 Pro லேப்டாப்பானது 14-இன்ச் 2.8K (2800 x 1800) OLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 500nits பிரைட்னஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் லேப்டாப்பான மோட்டோ புக் 60 ப்ரோ (Moto Book 60 Pro) சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மோட்டோ புக் 60 ப்ரோ லேப்டாப்பானது இன்டெல் கோர் அல்ட்ரா 7 மற்றும் கோர் அல்ட்ரா 5 எச்-சீரிஸ் ப்ராசஸர்களால் இயக்கப்படுகிறது மற்றும் யூசர்களுக்கு AI அம்சங்களையும் வழங்குகிறது.
விலை மற்றும் Specification விவரங்கள்:
நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பின் விலை ரூ.64,990-ல் தொடங்கி ரூ.80,990 வரை செல்கிறது. இந்த லேப்டாப்பின் கோர் அல்ட்ரா 5 ஆப்ஷனின் விலை ரூ.64,990-ல் தொடங்குகிறது. அதே நேரம் 32GB ரேம் கான்ஃபிகரேஷனுடன் கூடிய இன்டெல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.80,990 ஆகும். இவை 1TB SSD ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் கிடைக்கின்றன. வங்கி சலுகைகளுடன், மோட்டோ புக் 60 ப்ரோவின் இன்டெல் கோர் அல்ட்ரா 5 மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா 7 வேரியன்ட்கள் முறையே ரூ.59,990 மற்றும் ரூ.75,990 விலையில் வாங்கலாம்.
புதிய மோட்டோ புக் 60 ப்ரோ லேப்டாப்பானது 14-இன்ச் 2.8K (2800 x 1800) OLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 500nits பிரைட்னஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது. எனினும், இந்த டிஸ்ப்ளே 1100 nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டைப் பெறுகிறது. இது TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சான்றிதழ்களை கொண்டுள்ளது.
இந்த லேப்டாப் இன்டெல் கோர் அல்ட்ரா 5 225எச் அல்லது இன்டெல் கோர் அல்ட்ரா 7 225எச் CPU மூலம் இயக்கப்படுகிறது. இந்த வேரியன்ட்கள் முறையே 16GB DDR5 ரேம் மற்றும் 32GB DDR5 ரேம்-ஐ கொண்டுள்ளன. ஸ்டோரேஜைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் 1TB வரை SSD ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம்-இல் இயங்கும். ஸ்பீக்கர்களைப் பொறுத்தவரை, இந்த லேப்டாப்பில் இரண்டு 2W டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ (2W Dolby Atmos stereo) ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும், இது Windows Hello facial recognition-ற்கான IR கேமராவை கொண்டுள்ளது.
இந்த லேப்டாப் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 60Wh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷனை பொறுத்தவரை இந்த லேப்டாப்பில் Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி 3.2 ஜென்1 போர்ட்ஸ், பவர் டெலிவரி 3.0 மற்றும் டிஸ்ப்ளே போர்ட் 1.4 உடன் யுஎஸ்பி-சி 3.2 ஜென் 1 போர்ட்ஸ், HDMI 2.1 TMDS, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் உள்ளிட்டவை அடங்கும். மேலும், இந்த லேப்டாப் 1.39 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது. அதேபோல மோட்டோரோலாவின் புக் 60 ப்ரோ ஸ்மார்ட் கனெக்டை சப்போர்ட் செய்கிறது.