செப்டம்பர் 23ஆம் தேதி Flipkart Big Billion Days சேல் தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனை வரவிருக்கும் மற்றொரு பிரபல இ-காமர்ஸ் சிறப்பு விற்பனையான Amazon Great Indian சேலுக்கு இணையாக நடைபெறும். வரவிருக்கும் இந்த ஸ்பெஷல் விற்பனைகள் மூலம் யூஸர்கள் தொலைபேசிகள், ஸ்மார்ட் வாட்ச்கள், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS), வாஷிங் மெஷின்கள், ஸ்மார்ட் ஹோம் அப்ளையன்சஸ், குளிர்சாதனப் பெட்டிகள், பிசி-க்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற பல எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தள்ளுபடிகளைப் பெறுவார்கள். இந்த நிலையில் Big Billion Days Sale-ன்போது தங்களின் மொபைல்களுக்கு வழங்கப்பட உள்ள ஆஃபர்கள் குறித்த தகவலை Poco நிறுவனம் வெளியிட்டுள்ளது.
போகோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கான டாப் டீல்கள்:
Big Billion Days Sale 2025-ன் போது Poco F7 5G மொபைலின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.31,999-லிருந்து, ரூ.28,999 என்ற சலுகை விலையில் கிடைக்கும், இதில் வங்கி சலுகைகளும் அடங்கும். இந்த மொபைல் கடந்த ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. மேலும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜூடன் கூடிய இதன் ஹை-என்ட் வேரியன்ட் விலை அறிமுகத்தின்போது ரூ.33,999 ஆகும். இந்த மொபைல் 7,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சிறப்பு விற்பனையின்போது Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G ஆகிய மொபைல்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கும். அதேபோல ஸ்டாண்டர்ட் Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G ஆகிய மொபைல்கள் முறையே ரூ.14,499 மற்றும் ரூ.19,999-க்கு கிடைக்கும். இந்த சலுகை விலையில் வங்கி சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளும் அடங்கும். இது 6,550mAh பேட்டரியுடன் வருகிறது.
Poco X7 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. Poco X7 5G மொபைலின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் வேரியன்ட்டின் விலை ரூ.21,999 ஆகவும், 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.23,999-ஆகவும் இருந்தது. மறுபுறம், அறிமுகப்படுத்தப்பட்டபோது, Poco X7 Pro 5G-யின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜின் பேஸ் மாடல் விலை ரூ.27,999-ஆகவும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.29,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. தவிர முழு Poco M7 சீரிஸ் மொபைல்களும் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025ன் போது தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படும்.
ஸ்டாண்டர்ட் Poco M7 5G ஸ்மார்ட்ஃபோன், வங்கி தள்ளுபடிகள் உட்பட ரூ.8,799-க்கு கிடைக்கும். இந்த மொபைலின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.9,999 மற்றும் 8GB ரேம் ஆப்ஷனின் விலை ரூ.10,999ஆக அறிமுகமானது. இதில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மற்றும் 5,160mAh பேட்டரி உள்ளது. போகோவின் M7 Pro 5G மொபைலின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.14,999 ஆகும்.
ஆனால், சிறப்பு விற்பனையின்போது ரூ.11,499 என்ற தள்ளுபடி விலையில் விற்கப்படும். இந்த மொபைல் டிசம்பர் 2024-ல் MediaTek Dimensity 7025 Ultra SoC ப்ராசஸர் மற்றும் 5,110mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போகோ M7 Plus 5G-யின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அறிமுக விலையான ரூ.13,999-லிருந்து, சிறப்பு விற்பனையின்போது ரூ.10,999ஆக குறையும்.
இந்த மொபைல் சமீபத்தில் இந்தியாவில் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.14,999 என வெளியிடப்பட்டது. இது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.