சீனாவின் DeepSeek AI அமெரிக்காவின் ChatGPT AI ஓரம்கட்டியது…
சீனாவின் DeepSeek R1 AI Chatbot அமெரிக்காவின் தொழில்நுட்ப உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது.
வாங்க இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்…
DeepSeek AI யின் வருகையால் அமெரிக்க பங்குச்சந்தை சற்று சறுக்கல்களை சந்தித்துள்ளது. காரணம் DeepSeek R1 Chatbot Chatgpt க்கு கடும் போட்டியாக உள்ளது. இதனால் இனி AI தொழில்நுட்ப உலகில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும்.
இதுவரை வந்துள்ள சில AI Generative Softwares
1. OpenAI யின் ChatGPT
இந்த செயலி எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக முடிக்கிறது, சரளமாக உரையாடுகிறது, மேலும் தனிப்பட்ட பிரச்னைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது.
உங்களுக்கு வேலை பெறுவது, கவிதை எழுதுவது, கல்விக்கான கட்டுரைகள் மற்றும் நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.
2. Google ன் Gemini
இந்த Geminiai செயலியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான அஸிஸ்டன்ஸை பெறலாம். இதில் பயனர்கள் பெறுகின்ற பதிலை Double Check செய்யும் அம்சம் இருப்பதாக தெரிகிறது.
Text, Photos மற்றும் Videos களை அடையாளம் காணும் அம்சத்தை கொண்டுள்ளது Gemini. ProblemSo solving திறனில் இது Advanced நிலையில் உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
3. Twitter(X) ன் Grok
இது காரமான கேள்விகளுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும், கலகத்தனமான தன்மையுடனும் பதிலளிக்கிறது.
Grok பல்வேறு வகையான ஊடகங்களைக் கையாளக்கூடிய Multi model AI உடன் ஒப்பிடும்போது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட உரை அடிப்படையிலான Bot ஆகும். Microsoft ன் Bing AI மற்றும் ChatGPT ன் Premium Version போல்லாமல், Grok ஆல் பேசவோ அல்லது படங்களை உருவாக்கவோ முடியாது.
4. Microsoft ன் Copilot
Copilot பயன்பாட்டில் Copilot Vision Recall அம்சத்தின் முன்னோட்டம் போன்ற பல புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. Windows 11 மற்றும் 11 பிசிக்களில், Shortcut பார்வைக்காக Alt + Space ஐக் கிளிக் செய்வதன் மூலம் விசைப்பலகை குறுக்குவழிகள் மூலம் பயனர்கள் AI உதவியாளரை அணுக முடியும். AI View இடது மூலையில் உள்ள Icon வழியாக பிரதான Copilot பயன்பாட்டிற்குத் திரும்பலாம். Copilot Icon System Trayயிலும் தோன்றும்.
5. Facebook ன் Meta
தற்போது நீங்கள் WhatsApp, Facebook, Instagram போன்ற செயலிகளில் AI சாட்போட்டைப் பயன்படுத்தலாம். உங்களின் ஆர்வங்கள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய தகவல்கள்,வீடியோக்கள் மற்றும் பிற போஸ்டுகளைக் கண்டறிய Meta AI உங்களுக்கு உதவும். பல்வேறு மொழிகளில் படங்கள் மற்றும் Text ஆகியவற்றை மொழிபெயர்த்தல் வெளிநாட்டு நண்பர்களுடன் சேட்டிங் செய்யும்போது அவர்களுடைய மொழியைப் புரிந்து கொள்ள Meta AI உங்களுக்கு உதவும்.
இவை அனைத்தும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்துள்ள AI Softwares.
DeepSeek AI Chatbot பற்றிய முழு விவரம் இதோ :
சீனாவின் DeepSeek R1 AI தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுக்க பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதனால்தான் அமெரிக்க தொழில்நுட்ப உலகம் சற்று ஆட்டம் கண்டுள்ளது.
இந்த Deepseek R1 Chatbot யை உருவாக்க தேவைப்பட்ட தொகை 6 மில்லியன் டாலர். ஆனால் Chatgpt யை உருவாக்க தேவைப்பட்ட தொகை 10 பில்லியன் டாலர்.
ChatGPT க்கு DeepSeek கடுமையான போட்டியாக உள்ளது. DeepSeek நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள DeepSeek R1, மற்ற செயற்கை தொழில்நுட்பம் அடிப்படையிலான Chatbot அனைத்தையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. அந்த வகையில்,
DeepSeek R1 மற்றும் ChatGPT இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, எது அதிக பயன்பாடு என்பதை இங்கு பார்போம்.
ஒப்பிட்டளவில் குறைந்த செலவில் DeepSeek ன் போட்டித்திறன் செயல்திறன் அமெரிக்க AI Chatbot ஆன ChatGPT யை உலகளாவிய ஆதிக்கத்திற்கு சவால் விடும் திறன் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
DeepSeek R1 மற்றும் ChatGPT இவை இரண்டும் மனிதர்களை போலவே நாம் எழுத்துக்கலாக பதிவிடும்போது அதை செயற்கை நுண்ணறிவால் புரிந்து கொண்டு பதிலளிக்கும் திறன் கொண்ட LLM(Large Language Model). அதாவது உங்களுக்கு தேவையான ஆராய்ச்சியை மேற்கொள்வது, பிரோக்கிராம் செய்வதற்கு தேவையான கோடிங் எழுதுவது, நீங்கள் எழுதியவேண்டியவற்றை எழுதிக்கொடுப்பது ஆகியவற்றில் இவை உதவும். நீங்கள் தேர்வு எழுத வேண்டும் என்றால், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை இவற்றிடம் எழுத்து வடிவில் கொடுத்தால், இவையே விரிவாக விளக்கம் அளித்துவிடும் திறன் கொண்டது.
DeepSeek எங்கு தொடங்கப்பட்டது, எப்படி தொடங்கப்பட்டது?
DeepSeek என்ற நிறுவனம், சீனாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் கடந்த 17 ஜூலை 2023ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி லியாங் வென்ஃபெங். இது DeepSeek-V3 மாடலால் இயக்கப்படுகிறது.
ஜனவரி 10, 2025 அன்று, DeepSeek நிறுவனம் Apple iOS மற்றும் Android க்கான DeepSeek-R1 மாதிரியை அடிப்படையாகக் கொண்ட அதன் முதல் இலவச Chatbot செயலியை வெளியிட்டது. ஜனவரி 27 அன்று, அமெரிக்காவில் Apple iOS App Store இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக ChatGPT ஐ DeepSeek மிஞ்சியது .இதனால் nividia நிறுவன பங்கின் விலை 18% குறைந்தது.
கணினியில் DeepSeek R1 சாட்பாட்டை பயன்படுத்த வேண்டுமானால் அதன் இணையதளத்திற்கு சென்று அங்கு இமெயில் கணக்குகளை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் தற்சமயம் யாராலும் புதிதாக பதிவு செய்ய முடியாத நிலையில், இணையதளம் முடங்கியிருக்கிறது. ஒருவேளை நீங்கள் பதிவு செய்திருந்தால் அதனை பயன்படுத்தலாம். ChatGPT தளத்தை பயன்படுத்துவது போல் DeepSeek R1 யும் பயன்படுத்தலாம்.
இப்போதைக்கு DeepSeek ல் Text வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக, AI உலகில் Deep Seek மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கு முன்பு அறிமுகமான Open AI-யை விட, Deep Seek-ல் தகவல்கள் சற்று தெளிவாகவும், திருத்தமாகவும், எளிதாகவும் உள்ளது என்று இதன் பயனாளர்கள் Deep Seek-கை ‘ஆஹா…ஓஹோ’ என்று புகழ்ந்து வருகின்றனர். Deep Seek நிறுவனம் 2023-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும்,கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்த Chat Bot தான் தற்போது உலகளாவிய டிரெண்ட்ங்கில் உள்ளது.
நிதி நிறுவனம் to AI நிறுவனம்.
யார் இந்த டீப் சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங்.
அமெரிக்கத் தடையால் பாதிக்கப்பட்ட சோதனை… இப்போது அங்கேயே டாப் டிரெண்ட்!’ – யார் இவர்?
இப்படி உலக நாடுகள் அனைத்தும் பேசும் Deep Seek-க்குப் பின்னால் இருக்கும் நபர் லியாங் வென்ஃபெங். இவருடைய வயது வெறும் 40 தான்.
சீனாவைச் சேர்ந்த இவர், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். 2015-ம் ஆண்டு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனமான ஹை-ஃபிளையரைத் தொடங்கினார். அங்கு தான் இவருடைய AI பயணம் தொடங்கியுள்ளது.
ஹை-ஃபிளையர் நிறுவனத்தில் வணிக ஸ்ட்ரேட்டஜிகளுக்கு AI பயன்படுத்த தொடங்கிய இவர், அதில் ஆர்வம் அதிகமாக 2021-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட Nvidia கிராஃபிக் பிராசஸர்களை வாங்கிச் சோதனைகள் செய்து வந்திருக்கிறார்.
அவருடன் ஹை-ஃபிளையர் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் ‘இது தேவையில்லாத வேலை’ என்று கமென்ட்டுகளை அடுக்க, இவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், தன்னுடைய முயற்சிகளை மட்டும் கைவிடவில்லை.
இந்த சாட் பாட்டிற்கு அமெரிக்காவில் தனி பயனாளர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இது மாதிரியான AI அறிமுகப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.