LAVA நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது Blaze Dragon 5G என்ற Smart Phone னை அறிமுகம் செய்து உள்ளது.
அப்படி இதில் என்ன சிறப்பம்சம் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க…
LAVA நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது Blaze Dragon 5G என்ற Smart Phoneனை அறிமுகம் செய்துள்ளது. இதில் Snapdragon 4 Gen 2 Processor மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சரி வாங்க இந்தியாவில் Blaze Dragon 5G விலை என்ன என்று பார்ப்போம்…
LAVA Blaze Dragon 5G மொபைலின் 4GB RAM மற்றும் 128GB Internal Memory Storage வேரியன்ட் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கோல்டன் மிஸ்ட் மற்றும் மிட்நைட் மிஸ்ட் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமேசான் வழியாக நாட்டில் பிரத்தியேகமாக வாங்க இந்த மொபைல் கிடைக்கும். Amazon Great Freedom Festival விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் அமேசானின் பார்ட்னர் வங்கிகள் மூலம் ரூ.1,000 வங்கி தள்ளுபடியைப் பெறலாம். வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே LAVAவின் இலவச சேவையையும் அனுபவிக்க முடியும்.
LAVAவின் Blaze Dragon 5G மொபைலின் சிறப்பம்சங்கள்:
இந்த புதிய மொபைல் 6.74-இன்ச் HD+ (720×1,612 Pixels) 2.5D Displayவுடன் 120Hz Refresh Rate , 450 nits-க்கும் அதிகமான Peak Brightness மற்றும் 20:9 aspect Ratio வுடன் வருகிறது. இதில் Snapdragon 4 Gen 2 Processor ரால் இயக்கப்படுகிறது, இது 4GB LPDDR4x RAM மற்றும் 128GB UFS 3.1 Internal Storage வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4GB வரையிலான Virtual RAM விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. இது Stock Android 15 உடன் வருகிறது, மேலும் Android 16 OS மேம்படுத்தல் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்த வரை இந்த மொபைலின் பின்பக்கம் AI- சப்போர்ட் உடன் கூடிய 50-Mega Pixel Sensor மற்றும் முன்புறத்தில் 8-Mega Pixel Selfie Shutter உள்ளது. இந்த மொபைல் 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது சைட்-மவுண்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் Face Unlock அம்சத்துடன் வருகிறது. Dual SIM Support, 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக், FM ரேடியோ மற்றும் USB Type-C Port ஆகியவை பிற பயனுள்ள அம்சங்களாகும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, Bluetooth 5.4 மற்றும் GLONASS உடன் GPS ஆகியவை அடங்கும்.
Google Pixel 10 Series போன்களை வாங்குபவர்களுக்கு 1 வருஷம் FREE..
கூகுள் (Google) நிறுவனம் அதன் Pixel 10 Series Smart Phone களை வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் (Made by Google Event on Aug 20) அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, முழு பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு சலுகைகள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது
Google Pixel 10 Seriesன் கீழ் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL மற்றும் Pixel 10 Pro Fold என மொத்தம் 4 Smart Phoneகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், இவைகள் கூகுளின் டென்சர் ஜி 5 சிப்செட்களால் இயக்கப்படும் என்றும், Android 16 OS உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Android Headlines வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, Google Pixel 10 Series ன் வெளியீட்டு விலை நிர்ணயம் ஆனது பழைய Pixel 9 Seriesன் விலையைப் போலவே இருக்கும். பழைய 9 Seriesற்கும், புதிய 10 Seriesற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் – Pixel 10 Pro XL மாடலில் 128GB ஆப்ஷன் இல்லாமல் போகலாம்; மாறாக Basic Storage Option 256GB ஆக இருக்கலாம். லீக் ஆன விலை விவரங்களை பொறுத்தவரை, அமெரிக்காவில் Basic Google Pixel 10 ஸ்மார்ட்போனின் 128GB ஆப்ஷன் தோராயமாக ரூ.70,000 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 256GB ஆப்ஷன் தோராயமாக ரூ.78,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கனடாவில், இந்த வகைகளின் விலைகள் முறையே சுமார் ரூ.69,700 மற்றும் சுமார் ரூ.77,900 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Google Pixel 10 Proவின் (128GB) ஆரம்ப விலை அமெரிக்காவில் தோராயமாக ரூ.87,500 ஆகவும் மற்றும் கனடாவில் சுமார் ரூ.85,500 ஆகவும் இருக்கலாம். இது 256GB, 512GB மற்றும் 1TB வேரியண்ட்களிலும் அறிமுகமாகும். இவைகளின் விலை அமெரிக்காவில் முறையே தோராயமாக ரூ.96,300, ரூ.1,13,800 மற்றும் ரூ.1,26,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில், இதே வகைகளின் விலை சுமார் ரூ.93,800, ரூ.1,06,500 மற்றும் ரூ.1,23,600 ஆக இருக்கலாம்.
Google Pixel 10 Pro XLலின் 256GB ஆப்ஷன் அமெரிக்காவில் தோராயமாக ரூ.1,05,000 க்கும் கனடாவில் சுமார் ரூ.1,03,300) க்கும் அறிமுகம்ஸ் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 512GB மற்றும் 1TB Storage Option கள்(அமெரிக்கா அல்லது கனடாவில்) முறையே ரூ.1,15,600 அல்லது ரூ.1,14,100 மற்றும் ரூ.1,35,700 அல்லது ரூ.1,33,100 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள Pixel 10 Pro Fold ஸ்மார்ட்போனின் 256GB ஆப்ஷன் அமெரிக்காவில் தோராயமாக ரூ.1,57,600 க்கும் மற்றும் கனடாவில் சுமார் ரூ.1,52,100 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். 512GB மற்றும் 1TB வகைகளின் விலை அமெரிக்காவில் முறையே ரூ.1,68,100 மற்றும் ரூ.2,11,900 ஆகவும், கனடாவில் ரூ.1,62,900 மற்றும் ரூ.1,81,900 ஆகவும் இருக்கலாம். ஆன்லைனில் லீக் ஆன விவரங்கள் அடிப்படையில் அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, Google Pixel 10 Smart Phoneனை வாங்கும் வாடிக்கையாளர்கள் Google AI Pro திட்டத்தின் ஆறு மாத சந்தாவை இலவசமாக பெறுவார்கள். இதன்கீழ் ஜெமினை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் 2TB Google One Storage ஆகியவைகள் கிடைக்கும்.
இதேபோல Google Pixel 10 Pro அல்லது கூகுள் Google Pixel 10 Pro XL அல்லது Google Pixel 10 Pro Fold ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள், Google AI Proவிற்கான முழு வருட சந்தாவையும் பெறுவார்கள். கூடுதலாக, அனைத்து Pixel 10 Series வாங்குபவர்களும் 6 மாத காலத்திற்கான Fitbit Premiumயும், 3 மாத கால Youtube Premiumயும் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.