ரூ.7,999 விலையில் மெஜஸ்டிக் கிரீன் கலரில் கிடைக்கும் விவோ நிறுவனத்தின் Y19e Smartphone 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் சிறந்த மொபைல்களை தேடுகிறீர்களா?. அப்படியென்றால், நம்பகமான அன்றாட செயல்திறன், நீண்ட பேட்டரி லைஃப், ஸ்மூத்தான ஆப்ஸ் பயன்பாடு ஆகியவற்றை வழங்கும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Realme NARZO 80 Lite 4G
ரூ.8,299 விலையில் பீச் கோல்ட் கலரில் கிடைக்கும் ரியல்மியின் NARZO 80 Lite 4G மொபைலானது 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஒரு பெரிய 6300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் மெலிதான 7.94mm பாடியை கொண்டுள்ளது. இந்த மொபைல் 300 சதவீதம் அல்ட்ரா வால்யூமை சப்போர்ட் செய்கிறது. மேலும் கூடுதல் வசதிக்காக AI அசிஸ்டையும் உள்ளடக்கியது.
Vivo Y19e
ரூ.7,999 விலையில் மெஜஸ்டிக் கிரீன் கலரில் கிடைக்கும் விவோ நிறுவனத்தின் Y19e ஸ்மார்ட் ஃபோன் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 13MP மற்றும் 0.08MP டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது Unisoc T7225 ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 5500mAh பேட்டரி மூலம் இயங்குகிறது.
Samsung Galaxy F06 5G
ரூ.8,939 விலையில் Bahama Blue கலர் ஆப்ஷனில் கிடைக்கும் சாம்சங் நிறுவனத்தின் Galaxy F06 5G மொபைலானது 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜை யூஸர்களுக்கு வழங்குகிறது. இந்த மொபைல் 720 x 1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷனுடன் கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் Android 15-ல் இயங்குகிறது. இந்த மொபைலில் 5000mAh பேட்டரி, 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத், வைஃபை போன்றவற்றுக்கான சப்போர்ட் மற்றும் 230 கிராம் எடை கொண்டது.
Samsung Galaxy M06 5G
ரூ.8,999 விலையில் Sage Green கலரில் கிடைக்கும் சாம்சங் நிறுவனத்தின் Galaxy M06 5G மொபைலில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த மொபைல் MediaTek Dimensity 6300 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பன்னிரண்டு 5G பேண்டுகளை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. நான்கு தலைமுறை OS அப்டேட்ஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது மற்றும் பாக்சில் சார்ஜர் இல்லாமல் விற்கப்படுகிறது.
POCO M7 5G
ரூ.8,999 விலையில் மின்ட் கிரீன் கலர் ஆப்ஷனில் கிடைக்கும் போகோ நிறுவனத்தின் M7 5G மொபைலில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைல் SD4 Gen2 ப்ராசஸரில் இயங்குகிறது மற்றும் 6.88 அங்குல HD பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 50MP பிரைமரி கேமரா, 8MP ஃப்ரன்ட் கேமரா மற்றும் 5160mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
OPPO A3X 5G
ரூ.10,499 விலையில் கிடைக்கும் ஒப்போவின் A3X 5G மொபைலில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் Sparkle Black கலரில் வருகிறது. இது 6.67 அங்குல HD Plus டிஸ்பிளேவை கொண்டுள்ளது, ஸ்மூத் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் விரைவான பவர் டாப் அப்களுக்கு 45W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
IQ Z10 Lite 5G
ரூ.10,498 விலையில் டைட்டானியம் ப்ளூ நிறத்தில் கிடைக்கும் இந்த மொபைல் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜை வழங்குகிறது. இதில் Dimensity 6300 5G ப்ராசஸர் உள்ளது, இது 433K க்கும் அதிகமான AnTuTu ஸ்கோரை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் கூடுதல் நீடித்துழைப்புக்காக மிலிட்டரி கிரேட் ரெசிஸ்டென்ஸ் கொண்ட IP64 பாதுகாப்புடன் வருகிறது.
REDMI 14C 5G
ரூ.9,998 விலையில் கிடைக்கும் ரெட்மி 14சி 5ஜி மொபைலானது ஸ்டார்டஸ்ட் பர்ப்பிள் கலரில் கிடைக்கிறது, இதில் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இது மேம்பட்ட 4nm Snapdragon 4 Gen 2 ப்ராசஸரில் இயங்குகிறது மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய பெரிய 6.88-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மொபைலில் 50MP டூயல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி மற்றும் ஸ்டைலான ஸ்டார்லைட் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.